விஜய் டிவி காதல் ஜோடிகள் பிரிந்துவிட்டனரா? கவலையில் ரசிகர்கள்..!

விஜய் டிவி காதல் ஜோடிகள் பிரிந்துவிட்டனரா? கவலையில் ரசிகர்கள்..!actress-riya-and-vj-vishal-love

கோலிவுட்டில் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சி விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி மற்றும் ராஜா ராணி இரண்டும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் நெடுந்தொடர்களாகும்.

இதில் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் கதாநாயகியின் மகனாக இருப்பவர் வி.ஜே.விஷால். இவர் ராஜா ராணி சீரியல் கதாநாயகியான ரியாவுடன் காதலில் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் விஷால் மற்றும் ரியாவிற்கு காதல் முறிவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜூ வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டார். 

அப்பொழுது அவர், தான் காதலித்து வந்த பெண்ணுடன் சில வாரங்களுக்கு முன்னதாக காதல் முறிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இதனை வைத்து விஷால் மற்றும் ரியாவிற்கு காதல் முறிவு ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுவரையிலும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவோ அல்லது வந்ததாகவோ எந்த ஒரு இடத்திலும் இருவரும் கூறவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.