சினிமா

மீண்டும் களத்தில் இறங்கும் தெய்வமகள் அண்ணியார்! அதுவும் எந்த டிவி சீரியலில் தெரியுமா? செம கெத்துதான்!!

Summary:

சன் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெ

சன் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் தெய்வமகள். இந்த தொடரில் காயத்ரி கதாபாத்திரத்தில் கொடூர வில்லியாக, ஹீரோவின் அண்ணியாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் ரேகா கிருஷ்ணப்பா. அதனைத் தொடர்ந்தும் ஒரு சில தொடர்களில் இவர் தனது வில்லத்தனமான நடிப்பால் பலரையும் மிரளவைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் புதிய சீரியலில் நடிக்கவுள்ளார். இந்த புதிய சீரியலை இயக்குனர் குமரன் இயக்க உள்ளார். அவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் ஹிட் கொடுத்த தென்றல், தெய்வமகள், நாயகி சீரியல்களை இயக்கியுள்ளார்.

ரேகா நடிக்கும் இந்த புதிய சீரியலுக்கு தமிழும் சரஸ்வதியும் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரில் தென்றல் புகழ் தீபக் மற்றும் நாயகி புகழ் நக்ஷத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொடர் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 


Advertisement