சினிமா

நடுரோட்டில் நடிகை ரெஜினா செய்த செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், வைரலாகும் வீடியோ.!

Summary:

நடுரோட்டில் நடிகை ரெஜினா செய்த செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், வைரலாகும் வீடியோ.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவ ர்நடிகை ரெஜினா, மேலும்இந்த படத்தை தொடர்ந்து மாநகரம்,சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்,மிஸ்டர் சந்திரமௌலி ஆகியபடத்தில் நடித்துள்ளார்.

மேலும் தற்பொழுது சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை பார்ட்டி ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தனது  ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் 

அதில் ஓடும் காரிலிருந்து இறங்கி நடுரோட்டில் பாட்டு பாடி நடனம் ஆடியுள்ளார்.பின்னர் மீண்டும்  ஓடும் காரில் ஏறியுள்ளார்.

 பாவாடை தாவணியில் கிராமத்து பெண் போல்  இருந்த அவர்  நான் கிகி சேலஞ்ச் முடித்துவிட்டேன். இந்த டியூனில் தென்னிந்திய பெண்களாலும் டான்ஸ் ஆட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.பாப் பாடகர் டிரேக்ஸின் ஸ்கார்பியன் ஆல்பத்தில் பாடுவதற்கு இன் மை பீலிங்ஸ் சேலஞ் அல்லது கிகி சேலஞ்ச் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஒரு சவால் வைரலானது அதையே ரெஜினா செய்துள்ளார்.


Advertisement