பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
அட.. ரசிகரின் நெஞ்சில் ஆட்டோகிராஃப் போட்ட ராஷ்மிகா மந்தனா.. மகிழ்ச்சியில் பூரிப்படைந்த நெகிழ்ச்சி தருணம்..!!
கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் "கீதா கோவிந்தம்" என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து ராஷ்மிகா தளபதி விஜய்யுடன் வாரிசு என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், அவ்வப்போது படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் மும்பையை சுற்றி பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார். அத்துடன் கடந்த 2016-ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், சில வருடங்களிலேயே "National Crush" என்ற பட்டத்தையும் பெற்றார்.
இந்த நிலையில் மும்பையில் ராஷ்மிகா மந்தனாவை சந்தித்த அவரது ரசிகர் ஆட்டோகிராப் போடும்படி கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை ஏற்ற ராஷ்மிகா, அவரது நெஞ்சில் ஆட்டோகிராப் போட்டுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த ரசிகர், அந்த டீ-ஷர்ட்டை பிரேம் செய்யப்போவதாகவும், இது தனக்கு கிடைத்த வரம் என்றும் தெரிவித்து பூரிப்படைந்துள்ளார்.