விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
வாவ்.. ஜாலி ட்ரிப்! தொடையழகி ரம்பாவின் கணவர் மற்றும் பிள்ளைகளை பார்த்தீர்களா! கிடுகிடுவென வளர்ந்துட்டாங்களே!!
90ஸ் காலக் கட்டங்களில் விஜய், அஜித், கார்த்திக், சத்யராஜ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து தொடையழகியாக, இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரஜித் என்ற இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு இரு பெண்குழந்தைகள் இருந்த நிலையில், ரம்பாவிற்கும் அவரது கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் நாளடைவில் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகிய ரம்பா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அனைவரும் கடலில் டால்பினுடன் ஜாலியாக விளையாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.