காதலனை கட்டுக்கடங்கா மகிழ்ச்சியில் கரம்பிடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்; அசத்தல் கிளிக்ஸ் வெளியீடு.!

காதலனை கட்டுக்கடங்கா மகிழ்ச்சியில் கரம்பிடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்; அசத்தல் கிளிக்ஸ் வெளியீடு.!


actress-rahul-preeth-singh-tie-knot-with-love-boy-jackk

 

தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருபவர் ரகுல் ப்ரீத் சிங். கடந்த 2009ம் ஆண்டு முதல் இவர் படங்களில் நடித்து வருகிறார். 

தமிழில் யுவன், தடையற தாக்க, என்னமோ எதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகிறது. 

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் இவர் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஜாக்கி பஃனானி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டனர். தங்களின் சமூக வளைதளபக்கத்தில் மகிழ்ச்சியாக இருவரும் கரம்பிடித்த காட்சிகளையும் பகிர்ந்து இருக்கின்றனர்.