நடிகை ராதிகாவின் இந்த படத்தை பார்த்திருக்கீங்களா? உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகை ராதிகாவின் இந்த படத்தை பார்த்திருக்கீங்களா? உற்சாகத்தில் ரசிகர்கள்!


actress-radhika-unseen-pictures-during-the-wedding-of-a

தமிழ் சினிமாவில் 80 களிலிருந்து நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் நடிக வேல் எம்.ஆர் ராதாவின் மகளும், தமிழ் சினிமாவின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ராதாரவியின் சகோதரி ஆவார். 35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகையாக விளங்கி வருபவர். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர்.

Radhika

கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் 80 களிலும், 90 களிலும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். அதன் பிறகு குணச்சித்திர  கதாபாத்திரங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். ராடன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார்.

ராதிகாவும் நடிகை ஸ்ரீபிரியாவும் ஆரம்ப காலத்திலிருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். ஒரே காலகட்டத்தில் சினிமா துறையில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகா முன்னணி கதாநாயகியாக நடித்து வந்த காலகட்டங்களில் ஸ்ரீ பிரியா கதாநாயகியாக கவர்ச்சி பாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

Radhika

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நடிகை ராதிகாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவர் நடிகை ஸ்ரீபிரியாவின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தினை தற்போது பகிர்ந்து இருக்கிறார். இந்தப் புகைப்படத்தில் ராதிகா எப்படி இருக்கிறார் பாருங்கள் என்ற வாசகத்துடன் அவர் ராதிகாவுக்கும் ஸ்ரீபிரியாவுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.