நடிகை மீனாவிற்கு ஸ்பெஷல் ட்ரீட் வைத்த பிரபல முன்னணி நடிகை! என்ன அட்வைஸ் கூறியுள்ளார் பார்த்தீங்களா!!actress-radhika-give-treat-to-actress-meena

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயினாக ரஜினி, அஜித், கமல், விஜய், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு  உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு கணினி பொறியாளரான வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி நுரையீரல் பிரச்சினையின் காரணமாக மீனாவின் கணவர் வித்தியாசாகர் காலமானார்.  அதனால் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் மனமுடைந்து போனர். இந்த நிலையில் நடிகை மீனா சில தினங்களுக்கு முன்பு தனது 46வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

கணவரை இழந்து மீளாதுயரில் இருக்கும் மீனா அதிலிருந்து மீண்டு வருவதற்காக அவரது பிறந்தநாளை அவரது தோழிகள் கோலாகலமாக கொண்டாடினர். அதனை தொடர்ந்து நடிகை ராதிகா மீனாவை ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்று ட்ரீட் வைத்துள்ளார். அந்த புகைப்படங்களை மீனா தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் ராதிகாவிற்கு நன்றி கூறி பகிர்ந்துள்ளார்.

அதற்கு பதிலளித்த நடிகை ராதிகா, வாழ்க்கையில் எப்போது வீழ்ந்தாலும் உடனே எழுந்து விடுவேன் எனவும், அது மட்டுமில்லாமல் உடனே ஓடவும் செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாழ்க்கையில் இலக்குகளை நிர்ணயம் செய்து அதனை நோக்கிய பயணத்தை துவக்குமாறும் மீனாவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.