சினிமா

உங்க ஸ்டைல்லே தனி தான்... கருப்பு உடையில் கலக்கல் போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா சோப்ரா! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை பிரிங்கா சோப்ராவின் கருப்பு உடை கலக்கல் புகைப்படம்.

நடிகை பிரிங்கா சோப்ராவின் கருப்பு உடை கலக்கல் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். பின்னர் பாலிவுட் சென்ற இவர் அங்கு கொடிக்கட்டி பறந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் பிரியங்கா. 

இந்நிலையில் பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. நிக் ஜோன்ஸ் ப்ரியங்காவைவிட 13 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், பேஸ்கட்பால் தளத்தில் கழுத்து வரை கவர் பண்ணின கருப்பு மெல்லிய உடையில் ஒரு விரலில் பேஸ்கட்பாலை நிறுத்தி மாஸ் லுக் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.


Advertisement