அரசியல் சினிமா

அதிரடியாக அரசியலில் களமிறங்கும் செம்பருத்தி நடிகை.! அதுவும் எந்த பிரபல கட்சியுடன் தெரியுமா?

Summary:

actress priya raman join with bjp

தமிழசினிமாவில் வள்ளி என்ற திரைபடத்தின் மூலம் பிரபலமானவர் பிரியா ராமன். அதனை தொடர்ந்து அவர் சூர்யவம்சம், சின்ன ராஜா, நேசம் புதுசு என பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் அவர் நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

பிரியா ராமன் க்கான பட முடிவு

இந்நிலையில் சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர் செம்பருத்தி தொடரின் மூலம் மீண்டும் மாபெரும் ரீஎன்ட்ரி கொடுத்தார். மேலும் தனது கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். மேலும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரியா ராமன் பா.ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


Advertisement