தமிழகம் சினிமா

யார் இந்த நிலானி? ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாய்! திடுக்கிடும் உண்மைகள் அம்பலம்!

Summary:

Actress nilani already married and have two children

துணை இயக்குனர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாக சின்னத்திரை நடிகை நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு பற்றி பேசி காவல துறையினரால் கைது செய்பட்டவர் நடிகை நிலானி.

இந்நிலையில் தன்னை அவமரியாதை செய்துவிட்டார் என்று கூறி துணை இயக்குனர் லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். நாங்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலிப்பதாகவும், நாங்கள் இருவரும் கணவன் மனைவி போலத்தான் வாழ்ந்தோம் என்று அதிர்ச்சி வீடியோ ஒன்றை இறப்பதற்கு முன்பு வெளியிட்டுள்ளார் லலித்குமார்.

காலில் மெட்டி போட்டு அவருடைய காலுக்கு முத்தமிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தனக்கும் லலித்துக்கும் எந்த சம்மதமும் இல்லை என கூறி வரும் நிலானி, லலித்தை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. 

இதனையடுத்து, விசாரணைக்காக வளசரவாக்கத்திலுள்ள நிலானியின் வீட்டிற்கு இன்று போலீசார் சென்று பார்த்தபோது,  நிலானியின் 2 குழந்தைகள் அங்கு இருந்துள்ளனர். ஆனால், நிலானியை காணவில்லை.  இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, நிலானி மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை நடத்தவே போலீசார் சென்றுள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று தெரிவித்தனர். நிலானிக்கு வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement