கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
விஜய்யுடன் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நயன்தாரா! அம்மாடியோ! எத்தனை கோடி தெரியுமா?
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சர்க்கார் திரைப்படம். இந்நிலையில் சர்க்கார் படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ உடன் கூட்டணி சேருகிறார் தளபதி விஜய். தெறி, மெர்சல் என வெற்றிப்படங்களை கொடுத்த கூட்டணி மீண்டும் தளபதி 63 இல் கூட்டணி சேர்க்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்க இருக்கும் இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்ற கேள்வியும் எழுத்து. இந்நிலையில் தளபதி 63 இல் நடிக்க பிரபல நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், நயன்தாராவிற்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தளபதி 63 இல் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியில் உள்ளதாம் படக்குழு. அப்படி என்னதான் கேட்டார் என யோசிக்கிறீங்களா? விஜயுடன் நடிகை 6 கோடி கேட்டுள்ளாராம் நடிகை நயன்தாரா.