திருமண கொண்டாட்டத்தில் பிரபல நடிகை..! உற்சாகத்துடன் வெளியிட்ட வீடியோ.!actress-nakshathra-nagesh-marriage-raghav-festival-star

பிரபல திரைப்பட நடிகை, தமிழ் நிகழ்ச்சிகள் தொகுப்பாளினி நக்சத்திரா நாகேஷ். இவர் தந்தி தொலைக்காட்சியில் வானவில் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். பின்னர், சன் டி.வியில் ஒளிபரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். 

மேலும், சன் குடும்ப விருதுகள், தென்னிந்திய திரைப்பட விருதுகள் போன்ற நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, என் இனிய பொன் நிலவே திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகினார். 

Nakshathra Nagesh

சேட்டை மற்றும் வாயை மூடி பேசவும் படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய நக்சத்திரா, ஐ ஏம் சபரிங் பிரம் காதல் என்ற வெப் சீரிஸில் நடித்து வந்தார். பின்னர், சன் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் லட்சுமி ஸ்டோர்ஸ் தொடரில், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து வருகிறார். கனா காணும் காலங்கள் ரீயூனியன், ராணி மஹாராணி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். 

Nakshathra Nagesh

இவர் ராகவ் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் முன்னதாகவே நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் இறுதி செய்யப்பட்டு, அதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து நடிகை நக்சத்திரா நாகேஷ் இன்ஸ்டாகிராம் பதிவில், "என் மகிழ்ச்சியான வாழ்க்கையின் ஆரம்பம். உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசிர்வாதத்துடனும், ராகவ்வும் நானும் எங்கள் திருமண விழாக்களை ஆரம்பிப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எனது நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.