நடிகை நக்மா வெளியிட்ட அசத்தலான புகைப்படம்! செம குஷியான ரஜினி ரசிகர்கள்! அப்படி என்னதான் இருக்கு அதுல தெரியுமா? actress Nagma posted photo with Rajinikanth and his wife

தமிழ் சினிமாவில் 1994-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் என்ற  திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நக்மா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த அவருக்கென ஏரளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் நடிகை நக்மா ரஜினி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான  பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் நக்மா திரைப்பயணத்தில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. பின்னர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்த அவர் நாளடைவில்  அரசியலில் களமிறங்கினார்.

 இந்நிலையில் நடிகை நக்மா சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் இந்த புகைப்படம் லண்டனில் இருவரையும் சந்தித்தபோது எடுத்தது எனவும், நடிகர் ரஜினியுடன் பாட்ஷா படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு தான் மிகவும் பெருமைபடுவதாகவும் நடிகை நக்மா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.