மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
அதிர்ச்சி.. நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்! திரையுலகினர் கண்ணீருடன் இரங்கல்!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக அவதாரமெடுத்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை மீனா. அவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, அஜித் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். பெங்களூருவைச் சேர்ந்த இவருக்கும், மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவரும் மீனாவை போலவே விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு, மீனா, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் அதன் பக்கவிளைவாக வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவர் அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.