பயங்கர ஸ்லிம்மாக மாறிய மீனா, குஷ்பு! 25 வருடத்திற்கு பிறகு அண்ணாத்த ரஜினியுடன் முன்னணி நடிகைகள்.. வைரலாகும் புகைப்படம்.

பயங்கர ஸ்லிம்மாக மாறிய மீனா, குஷ்பு! 25 வருடத்திற்கு பிறகு அண்ணாத்த ரஜினியுடன் முன்னணி நடிகைகள்.. வைரலாகும் புகைப்படம்.



Actress meena and kushbu latest slim look photos

அண்ணாத்த படத்தில் நடித்துவரும் நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு ஆகியோரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தாலும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படாமலே இருந்தது.

தற்போது சூப்பர் ஸ்டார் அரசியலில் முழு கவனம் செலுத்திவருவதால் தான் கடைசியாக நடித்துவந்த அண்ணாத்த பட்டத்தின் படப்பிடிப்பு காட்சிகளில் அதிகநேரம் செலவிட்டு உடனே படப்பிடிப்பை முடித்துத்தர முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

rajini

குடும்ப கதையை மையமாக கொண்டு உருவாகும் அண்ணாத்த படத்தில் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர். மீனாவும், குஷ்பூவும் ரஜினியுடன் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்து நடித்துவருகின்றனர்.

மேலும் இருவரும் தங்கள் உடல் எடையை வெகுவாக குறைத்து பயங்கர ஸ்லிமாகவும் மாறியுள்ளனர். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதரபாத் சென்றுள்ள மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் செல்பி புகைப்படம் எடுத்து இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

rajini