சினிமா

விஜய்யுடன் அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடும்போது நான் கர்ப்பமாக இருந்தேன்! ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்த பிரபல நடிகை!!

Summary:

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னைத்தேடி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூ

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னைத்தேடி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரால் சொல்லி கொள்ளுமளவுக்கு முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

இந்த நிலையில் அவர் பிரபலங்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாட துவங்கினார். சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் பாடலில் அவர் போட்ட ஆட்டம் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. மேலும் அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி திரைப்படத்திலும் டண்டானா டர்னா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

I was pregnant when I danced with Vijay - Popular actress reveals in video  - Tamil News - IndiaGlitz.com

 இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை மாளவிகா தனது சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.  அப்பொழுது அவர், நடிகர் விஜய் ரித்திக் ரோஷன் போல. அவருடன் நடனமாடும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நழுவ விடக்கூடாது என்று எண்ணினேன். ஆனால் குருவி பட பாடலில் நான் டான்ஸ் ஆடும்போது 2மாதம் கர்ப்பமாக இருந்தேன். அதனால் என்னால் நன்றாக ஆட முடியவில்லை. ஒருவேளை அப்போது நான் கர்ப்பமாக இல்லை என்றால் அனைவரது மனதிலும் நன்கு பதியும்படி செம டான்ஸ் போட்டிருப்பேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.


Advertisement