சினிமா

இசை அமைப்பாளருடன் பிரபல நடிகை காதலா? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Summary:

Actress madonna sebastin photo with music director

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டின். அதனை தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கக் க க போ என்ற படத்தில் நாயகியாகா நடித்திருந்தார்.

மேலும் விஜய் சேதுபதியுடன் கவண், ஜூங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார் மடோனா. தமிழில் ஒருசில படங்கள் நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகள் வரிசையில் இவரால் இடம்பெற முடியவில்லை.

இந்நிலையில் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாம் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “சிலருடன் இருக்கும் போது மட்டும்தான் நாம் நாமாக இருக்கமுடியும். அது தான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது என அதிர்ஷ்டம்” என அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் அவரை காதலிக்கிறீர்களா என மடோனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement