சினிமா

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. கருப்பு பனியனில் காதில் பூ வைத்து கலக்கல் போஸ் கொடுத்த நடிகை லாஸ்லியா!

Summary:

நடிகை லாஸ்லியாவின் கியூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை லாஸ்லியாவின் கியூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியநேசன் அவரது பேச்சாலும், கொள்ளை அடிக்கும் அழகாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றார். ஆனால் நாளடைவில் அவர் மற்றொரு போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி ரசிகர்களிடயே மேலும் புகழை பெற்றார்.

இந்நிலையில் அண்மையில் லாஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். மேலும் லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். தற்போது கருப்பு பனியனில் காதில் பூ வைத்தப்படி உள்ள கியூட் புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் ரசனையை பெற்று வருகிறது.


Advertisement