அட.. அதே கியூட் ஸ்மைல்! பிக்பாஸ் லாஸ்லியாவா இது! குட்டி பாப்பாவாக எப்படியிருக்காரு பார்த்தீங்களா!!



actress-losliya-childhood-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இவர்  பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சில நாட்களிலேயே அவருக்கு பெரும் ஆர்மியே உருவானது. அதனைத் தொடர்ந்து லாஸ்லியா சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி பெரும் விமர்சனங்களை சந்தித்தார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியபின் இருவரும் அவரவர் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்  லாஸ்லியாவிற்கு தற்போது ஏராளமான படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் மற்றும்  தர்ஷனுடன் கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

losliya

 சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோ சூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். இந்த நிலையில் லாஸ்லியாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் லாஸ்லியா செம க்யூட் என புகழ்ந்து வருகின்றனர்.