சினிமா

கும்கி, சுந்தரபாண்டியன் திரைப்பட இளம் நடிகை லட்சுமி மேனனுக்கு என்ன ஆனது.? அவர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? கசிந்த ரகசியம்..!

Summary:

Actress lakshmi menon current status

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான லட்சுமிமேனன்  சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பினால்  அனைவராலும் கவரப்பட்டார். மேலும்  சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதும் இவருக்கு கிடைத்தது.

இதனை அடுத்து கும்கி திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களாகவே எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இவர் கடைசியாக ரெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு என்ன ஆனார்? என்ன செய்கிறார் என எதுவும் தெரியாமல் இவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் லட்சுமி மேனன்.

அந்த பேட்டியில் படங்களில் நடிப்பதற்கு பிரேக் எடுத்துள்ளதாகவும்,  விரைவில் மீண்டும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த பேட்டியில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியையும் அவர் தெரிவித்துள்ளார். Sociology பட்டப்படிப்பு படித்து வரும் இவர் படத்திற்காக குச்சிப்புடி நடனம் பயின்று வருகிறாராம். மிக விரைவில் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


Advertisement