சினிமா

பட்டாம்பூச்சி போல் பயங்கர எனர்ஜியுடன் பறந்த நடிகை குஷ்பூ! யாரும் எளிதில் பார்த்திறாத அறிய புகைப்படம் இதோ!

Summary:

நடிகை குஷ்பூவின் பட்டாம்பூச்சி போல் பரந்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

நடிகை குஷ்பூவின் பட்டாம்பூச்சி போல் பரந்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து, வருஷம் 16 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் இவர் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். பின்னர் நடிகரும் ,திரைப்பட இயக்குனரும் ஆன சுந்தர் சி.யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திட்டா என இரு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் சின்னத்திரை தொடரான லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது பஸ்சில் படியில் பயங்கர சந்தோசமாக தொங்கியப்படி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு once upon a time என பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...


Advertisement