சின்னத்தம்பி படத்தில் வரும் குஷ்புபோல் மிக ஒல்லியாக மாறிய குஷ்பு!! 7 நிமிடத்திற்கு முன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..Actress Kushbu shared latest slim look photos

நடிகை குஸ்புவின் லேட்டஸ்ட் ஸ்லிம் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இளம் வயதிலேயே சினிமாவில் பிரபலமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் அனைத்து உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஒரு காலத்தில் நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டிய சுவாரஸ்ய சம்பவமெல்லாம் அரங்கேறியுள்ளது.

kushbu

சினிமாவில் பிசியாக நடித்துவந்த குஷ்பு, இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் இறங்கியுள்ள இவர் தற்போது பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணி செய்துவருகிறார்.

அதேநேரம் மீண்டும் சினிமாவில் காம்பேக் கொடுத்துள்ள குஷ்பு, அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் பயனாக தனது உடல் எடையையே பல மடங்கு குறைத்து, பார்க்க சின்ன பெண்ணாக மாறியுள்ளார் குஸ்பு.

தனது உடல் எடை குறைந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை குஷ்பு அண்மையில் பதிவிட, 'சின்னத்தம்பி' படத்தில் வரும் குஷ்புவை பார்ப்பதுபோல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.