கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
நடிகை குஸ்புவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்! பாருங்கள் புரியும்!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை குஷ்பூ. இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் குஷ்பூ.
இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்குக்காக இவரது ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினர். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பிரபல இயக்குனர் சுநாதர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது சினிமாவையும் தாண்டி தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார் நடிகை குஷ்பூ. தற்போது சினிமாவில் நடிக்காவிட்டாலும் சன் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் குஷ்பூ.
பொதுவாக மேக்கப், அலங்காரம் என ஸ்டைலாக வலம்வரும் நடிகை குஷ்பு தற்போது மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் எந்த ஒரு மேக்கப்பும் இல்லை, எந்த ஒரு பில்டரும் இல்லை என்றும் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். குஷ்பூவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குஷ்பூ ஏன் இப்படி ஒரு படத்தை வெளியிட்டார் என யோசித்து வருகின்றனர்.
#nomakeup #nofilter #Raw #confidence I am not a stranger to it..👍❤️ pic.twitter.com/RLkhD1koCz
— KhushbuSundar..A proud INDIAN despite bng a Muslim (@khushsundar) February 24, 2019