மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
சமுத்திரம் படநடிகை காவேரி கல்யாணியின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கல்யாணி என்ற காவேரி. அதனைத் தொடர்ந்து அவர் கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த கண்ணுக்குள் நிலவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் அவர் சரத்குமார், முரளி நடிப்பில் வெளிவந்த அண்ணன், தங்கை பாசத்தை பேசும் சமுத்திரம் என்ற திரைப்படத்தில் தங்கையாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து காவேரி கல்யாணி விக்ரமுடன் காசி படத்திலும் நடித்திருந்தார். இவர் மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது காவிரி கல்யாணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது அவர் கே2கே ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட காதல் கதையை, திரில்லர் படமாக உருவாக்கியுள்ளார். மேலும் அதன் டீஸரை ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் காவேரி கல்யாணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Best wishes to Actress #KaveriKalyani on her debut as director &
— Gauthamvasudevmenon (@menongautham) March 9, 2020
Hero @ChethanCheenu &Team
Here is a PreLook & #TeaserGlimpse https://t.co/t6e0e3Meil#K2KProductions #ProductionNo1 #Holi #ChethanCheenu #Bilingual@onlynikil #NM