சினிமா

பிரபல நடிகையுடன் விவாகரத்தானது உண்மைதான்! வருத்தத்துடன் மனம்திறந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நாயகியின் சகோதரர்!

Summary:

Actress kaveri got divorce with soorya kiran

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் கல்யாணி. இவர்  தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த கண்ணுக்குள் நிலவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் அப்பு, பெண்ணின் மனதைத் தொட்டு, நினைக்காத நாளில்லை, சமுத்திரம், காசி, புன்னகைப்பூவே  ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கல்யாணி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான சூர்யகிரண் என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள்  உள்ளனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக சில ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து அவர்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.

இந்நிலையில் சூர்யகிரண் சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ்-4 ல் பங்கேற்று முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  அதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது மனைவி கல்யாணியை பிரிந்ததை குறித்து வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அப்பொழுது அவர், நான் அவரை இன்னும் நேசிக்கிறேன். அவர் தான் என்னை விட்டுப்பிரிந்துவிட்டார். அவர் தன்னை பிரிந்ததற்கு சொந்த காரணங்கள் இருக்கலாம். அது  எனது முடிவல்ல. அவர் இல்லாமல் வேறு யாருடனும் என்னால் வாழ முடியாது என கூறியுள்ளார். சூர்யகிரண் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நாயகி சுஜிதாவின் சகோதரர் ஆவார். 


Advertisement