எல்லாமே அவருக்காகத்தான்.! பிக்பாஸின் பலே திட்டத்தை போட்டுடைத்த பிரபல நடிகை!!

எல்லாமே அவருக்காகத்தான்.! பிக்பாஸின் பலே திட்டத்தை போட்டுடைத்த பிரபல நடிகை!!


actress-kasthuri-tweet-about-bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், காதல் காட்சிகளும்  பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3லும் சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் மீரா மிதுனுக்கு எதிராக வனிதா, சாக்ஷி, அபிராமி, ஷெரின் என பலரும் குரூப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

kasthuri

மேலும் மீரா எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறும் நிலையில் உள்ளார். இந்நிலையில் மீராவுக்கு ஆதரவு கிடைக்கும் வகையில் புதிய டாஸ்க்கும் நேற்று கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கு விமர்சனம் செய்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆடியன்ஸ் வோட்டுக்களில் அபாயகரமாக பின்தங்கியுள்ள  மீராவை இழக்க பிக்பாஸ்க்கு மனமில்லை- மீரா இல்லேனா கன்டென்ட் அடிவாங்குமே.   மீரா மீது அனுதாப அலை வீச வேண்டும் என்று திட்டமிட்டே இன்றைய டாஸ்க் கொடுக்கப்பட்டது என்று தோன்றுகிறது என பதிவிட்டுள்ளார்.