சினிமா

மாமனார் இறந்து இரண்டே நாட்களில் மீண்டும் இப்படியா? சோகத்தில் நடிகை கஜோல் குடும்பம்!

Summary:

Actress kajol mom admitted in hospital

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் பிரபல நடிகை கஜோல் மற்றும் அஜய் தேவ்கன். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான இவர்கள் இந்திய அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

நடிகை கஜோல் தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கஜோலின் கணவர் அஜய் தேவ்கனின் அப்பா சில நாட்களுக்கு முன்னர் உடலனல குறைவால் மரணமடைந்தார். சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்த இவரது மறைவுக்கு பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.மாமனார் இறந்து 

இந்நிலையில் மாமனார் இறந்து ஓரிரு நாட்களே ஆகும் நிலையில் இன்று கஜோலின் அம்மா தனுஜா நெஞ்சு வலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் காஜலின் குடும்பம் மீண்டும் சோகத்தில் உள்ளது.


Advertisement