சினிமா

அந்த நடிகர் திமிர் பிடித்தவர்! முன்னணி ஹீரோவை பற்றி காஜல் அதிர்ச்சி பேச்சு!

Summary:

Actress kajal agarwal talks about vijay and junior ntr

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கோமாளி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிலளித்த காஜல் அகர்வால் உங்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

அதில், தமிழில் நடிகர் விஜய்யை ரொம்ப பிடிக்கும் என்று கூறிய அவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர்" என பதில் அளித்தார். மேலும்,  ஜூனியர் என்டிஆர் பற்றி பேசும்போது "அவர் நல்ல நடிகர் மட்டும் அல்ல, நேர்மையானவரும் கூட. ஆனால் கொஞ்சம் திமிர் பிடித்தவர் அவர். இருந்தாலும் அதிலும் ஒரு நேர்மை இருக்கும். அதனால் அவரை பிடிக்கும்" என தெரிவித்துள்ளார் காஜல்.


Advertisement