சினிமா

சன் டிவியின் பிரபல சீரியலில் இருந்து திடீரென விலகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்! என்ன காரணம்? செம ஷாக்கில் ரசிகர்கள்!

Summary:

சன் தொலைக்காட்சியில் பூவே உனக்காக சீரியலில் நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே உனக்காக. இந்த தொடரில்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் ஜோவிட்டா.  இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகளாவார். 

இவர் ஏற்கனவே நடிகை அம்பிகாவின் மகன் ராம்கி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை இயக்குனர் சுந்தர்.சியின் உதவியாளராக இருந்த அஸ்வின் மாதவன் இயக்கியிருந்தார். இப்படம் இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையிலேயே அவர் பூவே உனக்காக சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் ஜோவிட்டா  அந்த தொடரில் இருந்து திடீரென விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான காரணம் என்ன என்பதை கூற அவர் மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜோவிட்டா தான் திடீரென சீரியலில் இருந்து விலகினால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவர். மேலும் அவர் பல பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்பதால் கொஞ்சம் நாட்கள் நடித்துக் கொடுத்துவிட்டு பின்னர் சீரியலில் இருந்து விலகலாம் என முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


Advertisement