சினிமா

படம் இப்படி இருந்தால் நடிகர் விஜய்யுடன் நடிக்க தயார்! நடிகை ஜோதிகா விளக்கம்!

Summary:

Actress jothika ready to act in kushi part two

நடிகர் விஜயின் வெற்றிப்படங்களில் மிகவும் முக்கியான படங்களில் ஓன்று குஷி. இயக்குனர் SJ சூர்யா இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாகவும், ஜோதிகா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். சிறு வேடத்தில் நடிகை மும்தாஜ் இதில் நடித்திருப்பார். நல்ல குடும்ப பாங்கான கதை அம்சம்கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் நாயகி ஜோதிகா காற்றின் மொழி என்னும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதன் செய்தியாளர்கள் சந்திப்பில் குஷி பார்ட் 2 வந்தால் அதில் நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய நடிகை ஜோதிகா நான் நடித்திருந்த குஷி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகின்றன. அவ்வாறு உருவானால் அதிலும் நான் கட்டாயம் நடிப்பேன்.

ஆனால் நான் ஏற்கும் அந்த கதாபாத்திரம் முதிர்ச்சியுடனும், புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்வது போல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். 


Advertisement