கடைசியாக என்னிடம்தான் பேசினார்! ஆனால்.. காதலனிடம் 3 மணி நேர விசாரணை!! நடிகை ஜெசிகா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

கடைசியாக என்னிடம்தான் பேசினார்! ஆனால்.. காதலனிடம் 3 மணி நேர விசாரணை!! நடிகை ஜெசிகா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!


actress-jesika-suicide-case-investigation-with-her-love

தமிழ் சினிமாவில் வாய்தா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை தீபா என்கிற பவுலின் ஜெசிகா. இவர் துப்பறிவாளன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  வசித்து வந்த ஜெசிகா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ஜெசிகா சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பவரை காதலித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முற்பட்டனர். ஆனால் சிராஜுதீன் காரைக்குடியில் சூட்டிங்கில் இருந்ததால் அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.

Jessika

இந்நிலையில் நேற்று கோயம்பேடு காவல் நிலையத்தில் ஆஜரான அவரிடம் போலீசார் ஏறக்குறைய மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது அவர் கூறியதாவது, ஜெசிகாவை நான் காதலிக்கவில்லை. அவர்தான் என்னை ஒரு தலையாக காதலித்தார். அவருக்கு தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்தது. அதனால் சிகிச்சைக்காக நான் அவரை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

மேலும் அது சம்பந்தமாக அவர் என்னிடம் பேசி வந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கூட கடைசியாக ஜெசிகா என்னிடம்தான் பேசியுள்ளார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில் போலீசார்கள் ஜெசிகாவிற்கு உண்மையிலேயே தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.