வாவ்.. செம கியூட்! முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! குவியும் லைக்ஸ்கள்!!

வாவ்.. செம கியூட்! முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! குவியும் லைக்ஸ்கள்!!


actress-jeniferbpost-her-son-photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் பாக்கியலட்சுமி தொடரில் முதலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். இவர் இதற்கு முன்பு ஏராளமான படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜெனிஃபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.

அதுமட்டுமின்றி அவர் தான் கர்ப்பமாக இருப்பதாலும், சீரியலில் தனது கதாபாத்திரத்தை நெகட்டிவ்வாக மாற்றுகிறார்கள் எனவும் கூறி பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து  சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்த ஜெனிஃபர் தனது கர்ப்ப கால போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

ஜெனிபருக்கு அண்மையில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஜெனிபர் தற்போது முதன்முதலாக தனது மகனது முகத்தை உலகிற்கு காட்டி, குழந்தைக்கு முத்தம் கொடுப்பது போன்ற கியூட்டான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் செம அழகு என கமெண்ட் செய்து லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர்.