அட அட... அழகு.. ஜெனிலியாவின் கியூட் டான்ஸுக்கு குவியும் லைக்ஸ்! வைரல் வீடியோ இதோActress jeneliya dance video

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷ் நடிப்பில் உத்தமபுத்திரன் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் அவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்  வந்தார். பின்னர் பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ள இவர், தனது குழந்தை, குடும்பம் என வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆகு இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை  மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கியூட்டான நடன வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை  பெற்று வருகிறார்.