சினிமா

அடேங்கப்பா! பெரிய மனசுதான்..தனது உதவியாளருக்கு பிரபல நடிகை கொடுத்த அசத்தல் பரிசு! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

Summary:

ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது உதவியாளருக்கு ஸ்வான்கி காரை பரிசாக அளித்துள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், சஞ்சய்  தத்,ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த அலாவுதீன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். அதனை தொடர்ந்து அவர் மர்டர், ஹவுஸ்ஃபுல் 2, டிஷ்யூம், ஜீத்வா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தசரா விழாவை முன்னிட்டு, ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது உதவியாளருக்கு ஸ்வான்கி கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

மேலும் டிராபிக் போலீஸ் போல உடையணிந்து அவர், அந்த காரை பரிசளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன் ஜாக்குலின் தனது மேக்கப்மேனுக்கு காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement