லவ் டுடே படத்தின் 100 வது நாள் வெற்றி விழா மேடையில் இவானா செய்த செயல்... ரசிகர்கள் மகிழ்ச்சி.!?

லவ் டுடே படத்தின் 100 வது நாள் வெற்றி விழா மேடையில் இவானா செய்த செயல்... ரசிகர்கள் மகிழ்ச்சி.!?


actress-ivana-taking-about-love-today-movie-at-100th-da

இவானா தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகையாவார். இவர் 2015ஆம் ஆண்டு வெளியான ராணி பத்மினி என்ற மலையாள படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின் 2018ஆம் ஆண்டு  ஜோதிகா நடித்த நாச்சியார் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

Ivana
மேலும் இவர் ஹீரோ, லவ் டுடே போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை பெரிதும் கவர்ந்திருக்கிறார். இவர் நடிக்கும் கள்வன், காம்ப்ளக்ஸ் போன்ற படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும், சிறந்த துணை நடிகைக்கான விருதும் நாச்சியார் படத்தில் நடித்ததற்காக இவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இத்தகைய நிலையில், கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரெங்கநாதன் லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். படத்தில் இவானா கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் 100 கோடி வசூலை குவித்து சாதனை செய்தது.

Ivana
இந்த படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா சிறு தினங்களுக்கு முன் நடைப்பெற்றது. அப்போது பேசிய இவானா, "லவ் டுடே படத்திற்கு பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. இந்த படத்தில் வாய்ப்பு அளித்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தில் நடித்த போது சத்யராஜ் அவர்களிடம் பல விஷயங்களை கற்று தெரிந்து கொண்டேன்." என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.