சினிமா

பாக்க திரிஷா மாறியே இருக்கம்மா...96 பட குட்டி ஜானுவின் அழகிய புகைப்படங்கள்!

Summary:

96 படத்தில் உள்ள குட்டி ஜானுவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

96 படத்தில் உள்ள குட்டி ஜானுவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இப்படத்தில் பள்ளி பருவ ஜானுவாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கௌரி கிஷான்.

காதலை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தை கண்டு ரசிகர்கள் பலரின் பள்ளி பருவ காதல்கள் நியாபகத்திற்கு வந்து போயின. அந்த வகையில் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர் கௌரி கிஷான் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் மலையாளம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகவும் இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது சிகப்பு நிற உடையில் உள்ள அழகிய புகைப்படங்களை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

 


Advertisement