சினிமா

நடிகை ஜெனிலியாவின் இரண்டாவது மகனை பாத்துருக்கீங்களா? இதோ! புகைப்படம்!

Summary:

Actress geniliya second son photo

2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் என்ற திரைப்படத்தில் ஹரிணி என்ற பெயரில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. பாய்ஸ் திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். பின்னர், விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தில் நாயகியாக ஜெனிலியா நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் விளையாட்டுத்தனமான பெண்ணாக நடித்திருந்தார் ஜெனிலியா. பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தம புத்திரம் திரைப்படத்திலும் இவர்தான் கதாநாயகி.

தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது.

பின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள். 

தனது இரண்டு வயது மகனுடன் கியூட் புகைப்படங்களை எடுத்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஜெனிலியா.தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Genelia D'Souza


Advertisement