சினிமா

என்ன ஒரு நெருக்கம்... ஜெனிலியாவின் கணவர் என்ன என்னலாம் பன்றாருன்னு பாருங்க வீடியோவில்!

Summary:

நடிகை ஜெனிலியாவுக்கு அவரது கணவர் உதவி செய்யும் வீடியோ 

நடிகை ஜெனிலியாவுக்கு அவரது கணவர் உதவி செய்யும் வீடியோ 

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை பூர்விகமாக கொண்டவர் ஜெனிலியா. தமிழ் சினிமாவில் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ஜெனிலியா. இவர் நடித்த விஜய்யின் சச்சின், ஜெயம்ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் அவர் பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ்தேஷ்முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இருமகன்கள் உள்ளனர்.  தற்போது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். ஜெனிலியா அண்மையில் ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டபோது தவறி கீழே விழுந்து கையை உடைத்து கொண்டார். இந்நிலையில் அவரது கணவர் ஜெனிலியாவுக்கு முடியில் பேண்ட் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...


Advertisement