சினிமா

குட்டி டவுசரில் குதூகலமாய் ஆட்டம் போட்ட நடிகை ஜெனிலியா! வைரல் வீடியோ காட்சி...

Summary:

நடிகை ஜெனிலியாவின் அரைகுறை ஆடை டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஜெனிலியாவின் அரைகுறை டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாய்ஸ் திரைப்படம் என்றால் பலருக்கும் நினைவில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்று ஜெனிலியா. தனது குறும்புத்தனமான நடிப்பினால், அழகினால் பலரையும் கவர்ந்தார் ஜெனிலியா. பாய்ஸ் திரைப்படம் மூலம் பிரபலமான இவர் பின்னர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார்.தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் புகழின் உச்சத்தில்  இருந்த இவர், பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ்தேஷ்முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இருமகன்கள் உள்ளனர். தற்போது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஜெனிலியா.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்த வகையில் அவர் தற்போது குட்டி டவுசருடன் கும்மாளம் அடித்த வீடியோ ஒற்றை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைராகி வருகிறது.


Advertisement