சினிமா

என்னது..பாரதி கண்ணம்மா சீரியல் வில்லியின் அம்மாவா இது!! பாக்க அவரது கடைசி தங்கச்சி மாதிரி இருக்காங்க.. ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரத

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கொடூர வில்லி கதாபாத்திரத்தில் வெண்பாவாக நடித்து அனைவரையும் மிரள வைத்து வருபவர் பரீனா. இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஃபரீனா இதற்குமுன் பல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பின்னர் அவர் சன் தொலைக்காட்சியில் ரேவதி நடிப்பில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் பாரதி  கண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் அண்மையில் தனது அம்மாவுடன் வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும்  பரீனாவுடன் இருக்கும் அவரது அம்மா பார்ப்பதற்கு அவரது தங்கை போல செம யங்காக உள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement--!>