நீ உன்னை திருத்து.. அறிவுரை கூறிய ரசிகருக்கு செருப்படியாய் பதில் கொடுத்த நடிகை.!Actress Farina Condemn Fanboy

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், ரசிகர்களுக்கு ஒரே மாதிரியான கதை அம்சத்தை கொடுக்காமல், பல கதை கொண்ட தொகுப்பாக விஜய் டிவி இருப்பதால், பெண் ரசிகர்களை கடந்து ஆண் ரசிகர்களிடமும் அமோக வரவேற்பு கிடைக்கிறது.

அந்த வகையில், பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் சின்னத்திரை தொடராக இருக்கிறது. அம்மாவை இழந்த பெண்மணி மருத்துவரை திருமணம் செய்து பின்னர் கட்டிய கணவன் தன்னை சந்தேகப்பட்டு, அவரை பிரிந்து வைராக்கியமாக குழந்தை தனியாக வளர்த்து போராட்டங்களை சந்திக்கும் பெண்மணியாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். 

இந்த சீரியலில் முதலில் கதாநாயகியாக நடிகை ரோஷினி நடித்த வந்தார். அவருக்கு பின்னர், அக்கதாபாத்திரத்தை நடிகை ஃபரீனா ஏற்றுக்கொண்டார். இவருடைய கதாபாத்திரத்திற்காகவே அவர் செல்லும் இடமெல்லாம் திட்டு வாங்கினாலும், அது தனக்கு கிடைத்த வரவேற்பு என்று அவர் பெருமையுடன் இருந்து வருகிறார். 

Actress Farina

அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசுவது, தனது புகைப்படங்களை பகிர்வது என இருப்பார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, முஸ்லீம் மதத்தை சார்ந்த இளைஞர், "நீங்கள் ஒரு முஸ்லிம். பின்னர் ஏன் இந்த நேரத்தில் பிரார்தனை செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இதனால் வெகுண்டெழுந்த நடிகை, "தொலைக்காட்சியில் சீரியலில் பார்ப்பது., அதில் உள்ள நடிகையை சமூக வலைதள பக்கத்தில் பின்தொடர்வது., கேள்வி கேட்பது என நீ என்ன செய்கிறாய். முதலில் உன்னை சுத்தமாக வைத்துக்கொள்., பின் என்னிடம் வந்து கேள்வி எழுப்பு" என்று கூறியுள்ளார்.