சினிமா

ஊரடங்கை மீறி, காதலருடன் காரில் ஹாயாக ஊர் சுற்றிய பிரபல நடிகை! வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்!!

Summary:

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள்

இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் 15 வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அத்தியாவசியத் தேவைகளுக்கு மக்கள் வெளியே வரலாம். அதற்கு மேல் தேவையில்லாமல் யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகையான திஷா பதானியும், அவரது காதலருமான டைகர் ஷெராப்பும் ஊரடங்கை மீறி காரில் சுற்றிகொண்டு இருந்துள்ளனர். மேலும் அவர்களை பிடித்த போலீசார்கள் வெளியே வந்ததற்கான காரணம் கேட்ட நிலையில் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement