சினிமா

விஜய் சேதுபதியிடம் உதவி பெற்று, அடுத்த கணமே உயிரை விட்ட நடிகை.! வைரலாகும் வீடியோ.!

Summary:

actress dead after getting help from vijaysethupathi

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் விஜய்சேதுபதி.

அதனை தொடர்ந்து பீட்சா, இதற்குதானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா, ரம்மி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ,சூதுகவ்வும்,றெக்க,  கவண், கருப்பன்,சேதுபதி, செக்க சிவந்த வானம், 96 என குறுகிய காலத்தில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவரது பந்தா இல்லாத வெளிப்படையான, எளிமையான  நடத்தையாலும், இரக்க குணத்தாலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் நடைபெற்று வருகிறது .

அப்போது, ரசிகர்களின் கூட்ட நெரிசலில் விஜய் சேதுபதி சிக்கி இருந்தபோது அவரிடம் வயதான பெண்மணி ஒருவர்  பண உதவி கேட்டுள்ளார். கூட்டத்தில் சிக்கி இருந்தாலும் பெண்மணியின் குரல் கேட்டதும் ,விஜய் சேதுபதி, அங்குள்ள ரசிகர்களிடமிருந்து  சில ரூபாய் நோட்டுகளை எடுத்து வயதான பெண்மணியிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கி அந்த இடத்தை விட்டு நகர்ந்த  சில நிமிடங்களிலேயே அப்பெண் மயங்கி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இறந்துபோன அப்பெண்மணியும் ஒரு நடிகை ஆவார். அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.