சினிமா

இந்த நடிகர் தனக்கு மருமகனாக கிடைத்தால் மகிழ்ச்சி. நடிகை அனுஷ்கா அம்மா அதிரடி பேட்டி!

Summary:

actress anushka shetty mother interview

தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகரான நாகார்ஜுனாவின் அறிவுறுத்தலின் பேரில் திரைத்துறைக்கு வந்தவர் நடிகை அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவில், மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். முதலில் யோகா பயிற்சியாளராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நாகார்ஜுனா நடிப்பில் வெளியான சூப்பர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனுஷ்கா, அந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார் அனுஸ்கா.

இந்நிலையில் தமிழில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடித்த ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, தமிழில் தான் நடித்த முதல் படத்திலேயே தனது அழகால் மனதை கவர்ந்த நடிகை அனுஷ்கா, அதன்பின் மீண்டும்  தெலுங்கில் கவனம் செலுத்ததா தொடங்கினர். அவர் நடித்த அருந்ததி படத்தின் மூலம் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தென்னிந்தியாவில் மாபெரும் வெற்றி அடைந்தது.

தொடர்ந்து, முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த அனுஷ்கா, அருந்ததி வெற்றிக்கு பிறகு பல படங்களில் கதாநாயகனே இல்லாத வரலாற்று கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்த சூழ்நிலையில், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் பிரபாஸுடன் இவர் நடித்த பாகுபலி உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது.

மேலும், பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. அது மட்டுமில்லாமல், பிரபாஸ், அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தது.

இந்நிலையில், அனுஷ்காவின் தாயார் ‘எனக்கு பிரபாஸை ரொம்ப பிடிக்கும். என் மகள் அனுஷ்காவுக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே காதல் இல்லை. அதனால் அவர்களின் திருமணம் பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.


Advertisement