சினிமா

அம்மாவும் அழகு...பொண்ணு அத விட அழகு... அம்மா பொண்ணுவின் அன்பு மிகுந்த அழகிய புகைப்படங்களை வெளியிட்ட கொடி பட நடிகை!

Summary:

நடிகை அனுபமா பரமேஷ்வரனின் அம்மா பொண்ணு அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

நடிகை அனுபமா பரமேஷ்வரனின் அம்மா பொண்ணு அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரேமம். இப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனுஷ்கு ஜோடியாக கொடி  படத்தில் நடித்துள்ளார்.

பின்னர் அவர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அனுபமா சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு புடவையில் அவரது அம்மாவுடன் உள்ள அன்பு மிகுந்த, அழகிய புகைப்படங்களை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement