இது புதுசா இருக்கே...மாடர்ன் மாஸ்க் போட்டு கும்முனு போஸ் கொடுத்த நடிகை அனுபமா பரமேஷ்வரன்!



Actress anupama parameswaran latest photo

நடிகை அனுபமா பரமேஷ்வரனின் ரோஸ் வைத்த கொரோனா மாஸ்க் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன்.

மேலும் இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் தனுஷ்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்துள்ளார். பின்னர் அவர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அனுபமா சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு டெய்லி அப்டேட் கொடுத்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு பணியனுடன் ரோஸ் வைத்த வெள்ளை மாஸ்க் போட்டுள்ள புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...