பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள்.! அவர் கூறிய அதிர்ச்சி தகவல்.!
நடிகை தனது குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்யும் போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை அந்த நடிகை சமூக ஊடகங்களில் தகவலாக வெளியிட்டுள்ளார். அதேவேளை இதுகுறித்து நடிகை போலீசில் புகார் அளிக்கவில்லை.
பிரபல மலையாள இளம் நடிகை அன்னா பென். கொச்சியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற போது அங்கு அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை அன்னா பென் கும்பலாங்கி நைட்ஸ், ஹெலன், கப்பேலோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அன்னா பென் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றேன். ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் என்னை கடந்து சென்ற இரண்டு ஆண்களில் ஒருவர் வேண்டுமென்றே என்மீது கைவைத்து விட்டு சென்றார்.
அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் உடனே அங்கிருந்து நழுவினர். எனக்கு கோபம் வந்தது. பிறகு காய்கறி வாங்க சென்றோம். அங்கும் என்னை பின் தொடர்ந்து வந்து நான் நடித்த படங்கள் பற்றி கேட்க தொடங்கினர். பெண்ணாக இருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற கேவலமான ஆண்களால் வெளியே செல்லும் பெண்கள் நிலையை பார்த்து கவலை வருகிறது.
ஆனால் என்னால் அவர்களை எதுவும் செய்யமுடியவில்லை. நான் அவர்களை அந்த இடத்திலேயே பளார் என அறைந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. அவர்கள் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அங்கிருந்து சென்றதை பார்த்தேன். எப்போதுமே பெண்களே இப்படியான பிரச்சனைகளில் சிக்குவதை பார்க்க முடிகிறது. ஒரு பெண் தன்னை எப்போதுமே பாதுகாத்து கொண்டிருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று என பதிவிட்டுள்ளார்.