சினிமா

அடுத்த நயன்தாரா நீந்தான்! வாயில வசத்தைக்கூட எடுக்காமல் அப்டியே போஸ் கொடுத்த அனிக்கா சுரேந்தர்!

Summary:

Actress Anikha Surendran looks like senior actress photo goes viral

நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு அவர் மகளாக நடித்ததில் இருந்து, ரசிகர்கள் அவரை அஜித்தின் மகளாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அதன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை, அவர் எப்போது என்ன செய்தாலும் சமூக வலைதளலங்களில் பிரபலமாகிவிடுகிறார். சமீபத்தில் கூட இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என இவரை வர்ணிக்க தொடங்கிவிட்டனர்.

ஒருபக்கம் ரசிகர்கள் இவரை புகழ்ந்தாலும், மறுபக்கம் ஒருசில ரசிகர்கள் இவரை வம்பிழுக்கத்தான் செய்கின்றனர். அதற்கு காரணம் மிகவும் கவர்ச்சியாக அவர் வெளியிடும் புகைப்படங்கள்தான் காரணம் என்று கூறலாம். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நான் செய்வதை செய்துகொண்டுதான் இருப்பேன் என்பதுபோல இவரும் அவ்வப்போது தனது குஜாலான புகைப்படங்களை வெளியிட்டுட்டுதான் வருகிறார்.

தற்போது அனிகா சுரேந்தர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. காரணம், புடவை கட்டி, தேவதை போல் அவர் போஸ் கொடுத்தவாறு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம். நீங்களும் பாருங்கள்.


Advertisement