சினிமா

நடிகை ஆண்ட்ரியாவா இது! சிறுவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா! வைரலாகும் கியூட் புகைப்படம்!

Summary:

Actress andrea childhood photo viral

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகை ஆண்ட்ரியா நடிப்பு  மட்டுமின்றி, ஆல்பம் வெளியிடுவது மற்றும் மேடை கச்சேரிகளில் பாடுவது என ஏராளமான ரசிகர்களை தன் வசம் கட்டியிழுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல முன்னணி நடிகர்களும் வீட்டில் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

View this post on Instagram

Then & now 🙃🙂 #fringebenefits

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

இந்த நிலையில் ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது, வித்தியாசமான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது சிறுவயது புகைப்படத்துடன், தற்போதைய புகைப்படத்தை இணைத்து வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட  ரசிகர்கள் ஆண்ட்ரியா சிறுவயதில் மிகவும் க்யூட்டாக இருப்பதாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement